பூதப்பாண்டி: மின்சாரம் தாக்கி குரங்கு பலி

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி ஆண்டிதோப்பு தாலுகா அலுவலக பகுதியில் கருமுக குரங்கு ஒன்று தனியாக சுற்றிதிரிந்தது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் குரங்கை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதற்கிடையே கருமுக குரங்கு நேற்று முன்தினம் உயரழுத்த மின்கம்பியில் ஏறியபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு இறந்தது. நேற்று குரங்கின் உடலை வனத்துறையினர் அடக்கம் செய்தனர்.