கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பேரூராட்சி 1வது வார்டு மார்த்தால் நாகூர் மீரான் காம்பவுண்ட் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று பேரூராட்சி பொது நிதி ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் காங்கிரீட் சாலை அமைக்கும் பணியினை நேற்று பேரூராட்சித் தலைவர் ஆலிவர்தாஸ் துவக்கி வைத்தார். அப்போது துணைத் தலைவர் அனில் குமார், கவுன்சிலர்கள் மரிய அற்புதம், யூனிஸ்பாபு, அசாருதீன் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.