தெங்கம்புதூர் அருகே கொத்தனார் தற்கொலை

1270பார்த்தது
தெங்கம்புதூர் அருகே கொத்தனார் தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூர் அருகே கீழபுத்தளம் பகுதியை சேர்ந்த 37 வயது கொத்தனார் பாலகிருஷ்ணன், திருமணம் ஆகாததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தந்தை-தாயார் இறந்த நிலையில், சகோதரி வீட்டில் தங்கி வந்த பாலகிருஷ்ணன், சம்பவத்தன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலகிருஷ்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி