கொட்டாரத்தில் மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி.

3பார்த்தது
கொட்டாரத்தில் மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி.
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தை அடுத்த இடையன்விளையைச் சேர்ந்த 57 வயதான கொத்தனார் கணேசன், நேற்று கொட்டாரம் பகுதியில் கழிவறை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மின்சார இணைப்பு பெறும் முயற்சியில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி படுகாயமடைந்துள்ளார். உடன் வேலை பார்த்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.