கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, சுருளோடு, கீரிப்பாறை, காளிகேசம், தடிக்காரன்கோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரப்பர் பால் வெட்டும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர் மழையால் தொழிலாளர்கள் பலர் வேலையிழந்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.