கன்னியாகுமரி புதுக்கிராமம் பஸ் நிலையம் அருகே நேற்று (மே 21) அதிகாலை 3 மணியளவில் அதிவேகமாக வந்த கார் ஒன்று மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மின்கம்பம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. காரில் 6 பேர் பயணம் செய்திருந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிகாலை நேரம் என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.