கன்னியாகுமரி மாவட்டம் கீழஉடையப்பன் குடியிருப்பைச் சேர்ந்த செல்வகுமாரின் மனைவி கலாலெட்சுமி (50)யிடம், அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் மகேஷ் (37) வாங்கிய கடன் பணத்தைத் திருப்பித் தரவில்லை. இது தொடர்பாக கலாலெட்சுமி கேட்டபோது, மகேஷ் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து, தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி, உதைத்து கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றார். படுகாயமடைந்த கலாலெட்சுமி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மகேஷ் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.