கன்னியாகுமரி மாவட்டத்தில் மது விற்பனையைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு சப் டிவிஷனுக்கும் ஒரு சிறப்புப் படை அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் போலீசார் மற்றும் சிறப்புப் படையினர் நடத்திய சோதனையில், ஒரு மாதத்தில் 763 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.