அஞ்சுகிராமம் அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

68பார்த்தது
அஞ்சுகிராமம் அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே உள்ள ஆதலவிளையைச் சேர்ந்தவர் வைகுண்டராஜன் (வயது 46), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப் பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டின் அருகே உள்ள கடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி கலைச்செல்வி அஞ்சுகிராமம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் நேற்று வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி