தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று பத்திரப்பதிவு அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரத்தில் உள்ள இடலாக்குடி சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் கொட்டாரம் சார் பதிவாளர் அலுவலகம் ஆகிய இரண்டு அலுவலகங்களில் கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். அறை கதவுகளை மூடிவிட்டு இந்த சோதனை நடைபெற்று வருகிறது.