கன்னியாகுமரி மாவட்டம் ராஜாவூரைச் சேர்ந்தவர் அந்தோணி முத்து இவர் மனைவி எலிசபெத் மேரி கடந்த ஜூன் 4ம் தேதி வீட்டில் இருக்கும் போது அங்கு வந்த பெண் ஒருவர், நன்றாக பேசி மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதை குடித்த அவர்கள் மயங்கிய நிலையில், எலிசபெத் மேரி கழுத்தில் கிடந்த 6.5 பவுன் நகையை அந்தப் பெண் எடுத்துச் சென்று விட்டார். இது குறித்து போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.