கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே பாம்பன் விளையில், மின் கம்பம் ஒன்று முறிந்த நிலையில் ஆபத்தான முறையில் நின்று கொண்டிருக்கிறது. தென்மேற்கு பருவக்காற்று வேகமாக வீசி வருவதால், இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபத்துகள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் உடனடியாக அந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.