100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி மயிலாடியில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமை வகித்தார். குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மேயர் மகேஷ் ஆர்ப்பாட்டத்தை துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.