தமிழக முதல்வர் குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதால், பிப்ரவரி 24 மற்றும் 25, 2026 ஆகிய நாட்களில் ட்ரோன்கள் மற்றும் பிற ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி செயல்படுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.