கொட்டாரத்தில் புகையிலை விற்ற முதியவர் கைது.

4பார்த்தது
கொட்டாரத்தில் புகையிலை விற்ற முதியவர் கைது.
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் லட்சுமிபுரம் பகுதியில் புகையிலை விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வேல்முருகன் என்பவருடைய பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கடையில் இருந்து 35 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி