தோவாளையில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

1145பார்த்தது
தோவாளையில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
தோவாளை தெக்கூர் பழைய பூக்கடை பகுதியைச் சேர்ந்த 80 வயதான மாணிக்கம்மாள், நேற்று முன்தினம் காலையில் தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து, அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி