ஆரல்வாய்மொழி அருகே மின்வாரிய ஊழியருக்கு கத்திக்குத்து.

1பார்த்தது
ஆரல்வாய்மொழி அருகே மின்வாரிய ஊழியருக்கு கத்திக்குத்து.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே, மின்வாரிய ஒப்பந்த ஊழியரான அருண் சஞ்சய் (21) என்பவர், மதுபோதையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முத்துக்கிருஷ்ணன் (32), குமரேசன் (32), செந்தில் முருகன் (39) ஆகியோரால் கத்தியால் சரமாரியாக வெட்டப்பட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டார். படுகாயமடைந்த அருண் சஞ்சய் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி