கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து

553பார்த்தது
குமரியில் இன்று பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் ராட்சத அலை வீசியது. இதைத்தொடர்ந்து கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் மண்டபம், கண்ணாடி பாலம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். கடல் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு படகு போக்குவரத்து நடக்கும்.

தொடர்புடைய செய்தி