குமரியில் 3 உணவகங்களுக்கு அபராதம் விதிப்பு

69பார்த்தது
கன்னியாகுமரி சுற்றுலாப் பகுதியில் உள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், கெட்டுப்போன கிரில் சிக்கன், பூரி மசாலா, அரிசி சாதம் உள்ளிட்ட சுமார் 24 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த மூன்று உணவகங்களுக்கு தலா 3,000 ரூபாய் வீதம் மொத்தம் 9,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி