செண்பகராமன் புதூர் துணை மின் நிலையத்தில் தீ விபத்து

76பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூரில் துணை மின் நிலையம் உள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் இன்று (ஜூன் 08) திடீரென தீப்பிடித்தது, இதனை தொடர்ந்து தீ கொழுந்து விட்டு எரிந்தது, இதனால் செண்பகராமன்புதூரில் சப்ளை செய்யப்படும் மின்சாரம் தடைபட்டதால் பல கிராமங்களில் மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மின்வாரியப் பணியாளர்கள் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி