வெள்ளிச்சந்தை அருகே முட்டம் ஓடை தெருவைச் சேர்ந்த ராஜன் (46) என்ற மீனவர் வெள்ளிக்கிழமை முட்டம் துறைமுகத்தின் தெற்கே 2 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கடலுக்குள் மயங்கி விழுந்தார். அவர் மீட்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து குளச்சல் கடலோர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.