குமரி கலை திருவிழா நிறைவு

58பார்த்தது
குமரி கலை திருவிழா நிறைவு
கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் குமரி கலை விழா கடந்த 28-ந்தேதி தொடங்கியது. விழாவை பால்வளத்துறை அமைச் சர் மனோ தங்கராஜ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். தொடர்ந்து குமரி கலை விழா கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவில் நேற்று பொள்ளாச்சி கண்ணாடி வெண்புறா குழுவினரின் ஜிக்காட்டம், சங்கரன்கோவில் கலைவாணர் கலை குழுவினரின் தப்பாட்டம் மற்றும் ஒயிலாட்டம், புளியங்குடி லெட்சுமி பல்சுவை நிகழ்ச்சி, கிராமிய கலை செம்மல் பாடகி வேதை உமா வழங்கிய நாட்டுப்புற பல்சுவை நிகழ்ச்சி உள்பட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலைஞர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பேசினார். இதில் மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், உதவி சுற்றுலா அலுலவர் சதீஷ்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செல்வலெட்சுஷ்மா, துறை அலுவலர்கள், கலைஞர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். கலைவிழா நிகழ்ச்சிகளை ஆசிரியர் நாகராஜ குமார் தொகுத்து வழங்கினார்.

தொடர்புடைய செய்தி