கன்னியாகுமரி மாவட்டம் கீழத்திடல் பகுதியைச் சேர்ந்த 61 வயதான மார்க், கொத்த
வேலை செய்து வந்துள்ளார். கடுக்கரை சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, நிலை தடுமாறி ஒரு வீட்டின் கேட்டில் மோதி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக பூதப்பாண்டி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.