குமரி: ஆட்டோ டிரைவரை கல்லால் தாக்கியவர் மீது வழக்கு.

3பார்த்தது
குமரி: ஆட்டோ டிரைவரை கல்லால் தாக்கியவர் மீது வழக்கு.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே குஞ்சன் விளையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராதாகிருஷ்ணன் (40) என்பவர், ஒத்தக்கடை பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த சுதன் என்பவரிடம், 'இந்த இடத்தில் மது அருந்தக் கூடாது' என்று கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுதன், ராதாகிருஷ்ணனை கல்லால் தாக்கியதில் அவருக்குக் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி