கன்னியாகுமரியில் போக்குவரத்துக்கு இடையூறாக கார் நிறுத்தியதாக கூறப்படும் விஷ்ணு என்ற இளைஞர், பெண் சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி, அரசுப் பணியை செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின் பேரில், நேற்று விஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.