கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களின் விவரங்களை முறைப்படுத்தவும் காவல்துறை சார்பில் இன்று பெயர் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் கலந்துகொண்டு தங்களது விவரங்களைப் பதிவு செய்தனர்.