வாக்காளர் அட்டையுடன் குமரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

1பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புதூரில், கோவிலுக்கு சொந்தமான 14 செண்ட் நிலத்தை கிராம நிர்வாக அதிகாரி ராகுல், பொன்சந்திரன் மற்றும் அசோகன் ஆகியோருக்கு பட்டா போட்டுக் கொடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ. மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஊர் மக்கள் இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பதாகவும் அவர்கள் வாக்காளர் அட்டைகளுடன் வந்து அறிவித்தனர்.

தொடர்புடைய செய்தி