கன்னியாகுமரியில் கிறிஸ்தவ பேரவை இயக்க செயலாளரும், விசிக மாநில செயலாளருமான ஸ்டீபன், முதல்வர் குறித்து ஆபாசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதை திமுக விவசாய அணி பொறுப்பாளர் பிரபு வீடியோ எடுத்துள்ளார். இதை கவனித்த ஸ்டீபன் மற்றும் அவருடன் இருந்தவர்கள் பிரபுவை விரட்டி சென்றனர். அப்போது, தவறி கீழே விழுந்த பிரபு வேஷ்டி அவிழ்ந்தநிலையில், அரை நிர்வாணமாக சாலையில் பயந்து ஓடினார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.