கன்னியாகுமரி மறக்குடி தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 30). இவர் தனியார் மீன் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு உதயகுமார் தனது மோட்டார் சைக்கிளில் பணகுடியில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் வந்தபோது தீடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் வைத்திருந்த தடுப்பு வேலி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் தூக்கி வீசப்பட்ட உதயகுமார் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசார்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உதயகுமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.