கன்னியாகுமரி மாவட்டத்தில் திருப்பதிசாரத்தில் உள்ள நெல் ஆராய்ச்சி நிலையத்தில் கன்னிப்பூ மற்றும் கும்பப்பூ பருவங்களுக்கு புதிய நெல் ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக புதிய ரகங்கள் கண்டுபிடிக்கப்படாததால், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.