கன்னியாகுமரி மாவட்டம் அழகிய பாண்டிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கடுக்கரை விலக்கு பகுதியில், காசி திருமடத்திற்கு சொந்தமான 1 ஏக்கர் கோவில் சொத்து தொடர்பாக ஸ்டாலின் ராணி மற்றும் சந்திரன் இடையே நிலவி வந்த பிரச்சனை நேற்று மதியம் வெடித்தது. சந்திரன் நிலத்தில் விவசாயம் செய்ய வந்தபோது, ஸ்டாலின் ராணி மற்றும் அவரது மகன் கிங்ஸ்லி ஆகியோர் சிலருடன் சேர்ந்து சந்திரனை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். காயமடைந்த சந்திரன் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கிங்ஸ்லி, ஸ்டாலின் ராணி உள்பட ஆறு பேர் மீது பூதப்பாண்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பட்டப் பகலில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.