கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயத்தில் மாவட்ட வன அலுவலர் அன்பு உத்தரவின் பேரில், பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் ந. அன்பழகன் தலைமையில் இன்று (மே 22) சர்வதேச பல்லுயிர் பெருக்க தினம் கொண்டாடப்பட்டது. இதில் உதவி வேளாண்மை அலுவலர் அனந்த பத்மநாபன், உள்ளாட்சித் துறை அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.