குமரியில் கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, அஞ்சு கிராமம் அருகே காணிமடம் சோதனை சாவடியில் நேற்று போலீசார் நடத்திய சோதனையில், அனுமதியின்றி எம். சாண்ட் கனிம வளத்தை லாரியில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் லாரியைப் பறிமுதல் செய்து, டிரைவர் சுடர்மணியைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.