குமரி: போக்சோ வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் கைது.

0பார்த்தது
குமரி: போக்சோ வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் கைது.
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே ஆறுமுகபுரம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (45) மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் பரிந்துரைத்ததை அடுத்து, கலெக்டர் அழகுமீனா உத்தரவின் பேரில் பிரபாகரன் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.