குமரி: மாயமான சிறுமிகள் மீட்பு

கன்னியாகுமரி கடற்கரை அருகே தனித்து சுற்றித்திரிந்த 15 வயது சென்னை சிறுமி, 18 வயது தெலுங்கானா சிறுமி ஆகியோரை சுற்றுலா போலீசார் மீட்டனர். சென்னை சிறுமி செப்டம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியேறியதும், இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் பாதுகாப்பாக மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சிறுமிகளை மீட்டு நடவடிக்கை எடுத்த சுற்றுலா போலீசாரை மாவட்ட சூப்பிரண்டு ஸ்டாலின் பாராட்டினார்.
