குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே. 27) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், விவசாயி ஞாலம் ஜெகதீஷ் மாவட்ட ஆட்சியர் அழகுமீனாவிடம் மனு அளித்தார். தோவாளை தாலுகா சிறமடம் கிராமத்தில் சட்டவிரோதமாக மண் கடத்தி மண்வளத்தை அழிக்கும் தனிநபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கான உரிய தீர்வை ஆட்சியர் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.