கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் போது, அம்மனுக்கு பக்தர்கள் வழங்கிய தங்க ஆபரணங்களை அணிவித்து முறையான அலங்காரத்துடன் வீதி உலா அழைத்து வர வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் மாநகர செயலாளர் நாஞ்சில் ராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (மே. 27) இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.