கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் பெய்து வரும் விட்டு விட்டு பெய்யும் மழையால் ரப்பர் பால் வடிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஒரு கிலோ ரப்பர் ₹175 ஆக இருந்த நிலையில், தற்போது ₹260 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், உற்பத்தி இல்லாததால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.