அடுத்த மாதம் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், குமரியில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. நாகர்கோவில் கவிமணி மேல்நிலைப்பள்ளி கிடங்கில் இருந்து புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஒரு வார காலத்திற்குள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.