அமைச்சர் மனோதங்கராஜ் இன்று கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "மோடி நேர்மையானவர் என்றால் ஆட்சியை கலைத்துவிட்டு செல்லவேண்டும். ஒவ்வொரு இடத்திலும் நடைபெறும் மோசடியின் விளைவாகத்தான் ஆட்சியில் இருக்கிறார்கள். எந்த காமராஜரை அழிக்க நினைத்தார்களோ, அவர்கள் தற்போது வாக்கு வங்கி அரசியலுக்காக காமராஜரை கையில் எடுத்துள்ளனர்" என்று கூறினார்.