கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவன் நேற்று பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த மாணவனை ஆசிரியர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாணவன் ஏன் குதித்தான் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை. இது குறித்து காவல்துறையினரும் கல்வித்துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.