குமரி: குடிநீர் குழாய் சீரமைப்பு பேரூராட்சித்தலைவர் நடவடிக்கை

51பார்த்தது
குமரி: குடிநீர் குழாய் சீரமைப்பு பேரூராட்சித்தலைவர் நடவடிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் பகுதிக்கு வரும் குடிநீர் இணைப்பு சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு சேதமடைந்து கடந்த 20 நாட்களாக குமாரபுரம் பகுதி மக்கள் சரிவர குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். சேதமடைந்த குடிநீர் குழாயினை நேற்று முற்றிலும் அப்புறப்படுத்தி புதிய குடிநீர் குழாய் பொருத்தப்பட்டு குமாரபுரம் பகுதி மக்களுக்கு சீராக குடிநீர் கிடைக்க ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவர் முத்துக்குமார் நடவடிக்கை மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி