குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அஞ்சு கிராமம் சோதனை சாவடியில் நேற்று நடைபெற்ற இந்த சோதனையால் அப்பகுதியில் கடும் வாகனப்
போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. ஏராளமான கனிம வள வாகனங்கள் சாலையில் நின்றதால், மற்ற வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.