விஜய்யின் முன்னாள் மேலாளரும் திரைப்பட இயக்குநருமான பி. டி. செல்வகுமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக தனக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, தேர்தல் நேரத்தில் ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். இதனால், தனது கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் நலன் விரும்பிகளுடன் கலந்தாலோசித்து, தளவாய் சுந்தரத்துக்கு தனது ஆதரவைத் தெரிவிப்பதாக அவர் கூறினார்.