கன்னியாகுமரி மாவட்டம் தர்மபுரத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி அழகியநாயகம், வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இந்நிலையில், தனது கணவரின் உடலை மீட்டு தாயகத்திற்கு கொண்டுவர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது மனைவி சைலஜா, நேற்று (மே. 19) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார்.