குமரி: கணவர் இறந்த மனவேதனையில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை.

0பார்த்தது
குமரி: கணவர் இறந்த மனவேதனையில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை.
கன்னியாகுமரி மாவட்டம் பள்ளம் பகுதியை சேர்ந்த 48 வயதான தெரசாள், கணவர் இறந்த மன வேதனையால் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது மகன் ஜஸ்டின் அவரை கவனித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தெரசாள் வீட்டின் சமையலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி