தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்திற்கு சிறப்பு உண்டு. இந்த மாதத்தில் பௌர்ணமியும் கிருத்திகை நட்சத்திரமும் இணையும் நாளில் திருக்கார்த்திகை தீபம் கோவில்களிலும் வீடுகளிலும் ஏற்றப்படுகிறது. நாகர்கோவிலில் திலகர் தெருவில் பெண்கள் அகல்விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.