கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறையில் உள்ள தனியார் தோட்டத்தில் பணிபுரிந்து வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த சுபாஷ் ஜி லாங்கியா (31), ஊருக்குச் செல்ல கன்னியாகுமரி ரயில் நிலையம் சென்றார். ரயில் புறப்பட்டுச் சென்றதால் ஆத்திரமடைந்த அவர், மதுபோதையில் ஸ்டேஷன் மாஸ்டர் அகிலேஷை தாக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, ரயில்வே போலீசார் சுபாஷ்ஜி லாங்கியாவை நேற்று கைது செய்தனர்.