கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே உள்ள கீழமணக்குடி பகுதியில் நேற்று மதியம் மது விற்பனை நடப்பதாக தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அதில் புத்தளம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 45) என்பவர் மது விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.