கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் சப்-இன்ஸ் பெக்டர் பிரியராஜ்குமார் மற்றும் போலீசார் காணிமடம் சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, நெல்லை மாவட்டத்திலிருந்து குமரி மாவட்டத்திற்கு அரசு அனுமதியின்றி பாறைப்பொடி கடத்தி வந்த லாரியை தடுத்து நிறுத்தினர். லாரியை பறிமுதல் செய்த போலீசார், நாங்குநேரி உந்தன்குளத்தைச் சேர்ந்த டிரைவர் சுடர் மணி (31) என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவம் நேற்று நடைபெற்றது.